ஆறு பட பாணியில்.. உடலில் ரயில் ஏறி சென்ற பின்பும் உயிரோடு வந்த நபர்- வீடியோ

2017-11-21 10,390

உத்தரபிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மிகவும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி இருக்கிறார். இவர் கடக்கும் போது பாதி வழியில் ரயில் எடுத்த காரணத்தால் அப்படியே ரயிலுக்கு கீழ் படுத்து இருக்கிறார். இவர் எப்படி உயிர் தப்பினார் என்பது தற்போது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் 'டியோரியோ பங்காத்' என்ற ரயில் சந்திப்பில் இருந்த சரக்கு ரயில் ஒன்று புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலுக்கு கீழே சென்று ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்று இருக்கிறார்.

இவருக்கு ரயில் புறப்பட தயாராக இருந்த விஷயம் தெரியாமல் போய் இருக்கிறது. பல பேர் ரயில் எடுக்க போகிறது என்று சொன்னதையும் இவர் காதில் வாங்காமல் தைரியமாக ரயிலுக்கு அடியில் சென்று இருக்கிறார். ஆனால் அவர் உள்ளே சென்ற அடுத்த நொடி ரயில் புறப்பட்டு இருக்கிறது. உடனடியாக சுதாரித்த அவர் ரயிலுக்கு அடியில் அப்படியே படுத்து இருக்கிறார். ரயிலு செல்லும் வரையில் ஆடாமல் அசையாமல் இருந்துள்ளார்.



The unidentified man was trying to cross the train path by going under a train. unfortunately train passes over him, bt he walks away unhurt.

Videos similaires