கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு அழகுப் பதுமையாக வந்த 'மயிலு' மகள்- வீடியோ

2017-11-21 2

கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வி கபூருடன் கலந்து கொண்டார். கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. நேற்று துவங்கிய விழா வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க விழாவில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர், மூத்த மகள் ஜான்வி கபூருடன் கலந்து கொண்டார். ஜான்வி தாய் வழியில் நடிகையாகியுள்ளார். மராத்தி படமான சாய்ரத் ரீமேக்கில் ஜான்வி இஷான் கட்டார் ஜோடியாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிய நிலையில் ஜான்வி கோவா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஜான்வி நிகழ்ச்சிக்கு மிகவும் அழகாக வந்திருந்தார். ஜான்வி மட்டும் அல்ல தடக் பட ஹீரோ இஷான் கட்டாரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இஷான் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கோவா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக ஷாருக்கான் கொல்கத்தா திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கோவா சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்றதில் மகிழ்ச்சி என ஸ்ரீதேவி ட்வீட்டியுள்ளார்.


Jhanvi Kapoor has made her debut appearance at the International Film Festival of India (IFFI) event in Goa after the release of her debut movie's first look.

Videos similaires