பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேட்டி- வீடியோ

2017-11-20 127

மன்னார்குடி மாபியா கும்பலிடம் அதிமுக சிக்கிவிட கூடாது என்பது தான் அக்கட்சியினர் கொந்தளிப்படைந்துள்ளதற்கான காரணம் என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் போயஸ் தோட்டத்திலும் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார். 2ஜி ஸ்பெக்ரம் வழக்கின் தீர்ப்பு வரும் 6 அல்லது 7ம் தேதி வெளியாக உள்ளது. அப்போது யார் யார் கம்பி எண்ணுவார்கள் என்பது தெரியவரும் என்று கூறினார். அதிமுக கட்சியினர் கொந்தளிப்படைந்துள்ளதற்கு முக்கிய காரணமே அக்கட்சி மன்னார்குடி மாபியா கும்பலிடம் சிக்கி விட கூடாது என்பதற்காக தான் என்று எச். ராஜா தெரிவித்தார்.

Dis : Hence the cause of the party is that the AIADMK should not be stuck with the Mannargudi Mafia gang. Raja said.