பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த கடை வீதியில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை கடலூர் அருகே பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். புதுவை முத்தியால்பேட்டையில் இருந்து இன்று காலை ஒரு வாலிபர் இரு சக்கர வாகனத்தில் அண்ணாசாலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து காரில் ஒரு கும்பல் விரட்டி வந்தது. ஜவுளிக்கடை அருகே வந்தபோது காரில் வந்த அந்த கும்பல் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறி அந்த வாலிபர் கீழே சாய்ந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் ஓடிவந்தது. உடனே அந்த வாலிபர் தப்பிக்க அருகில் உள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றார்.
வீட்டு உரிமையாளர் கதவை சாத்திக் கொண்டதால் அவரால் தப்பி ஓடி முடியவில்லை. உடனே அந்த கும்பல் வாலிபரை சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வாலிபரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்திலேயே அந்த வாலிபர் உயிரிழந்தார்.
3 persons were nabbed by the people in Cuddalore after they mu%dered a person in Puducherry.