132 ஆண்டு பாரம்பரிய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகும் ராகுல் காந்தி..வீடியோ

2017-11-20 5,105

132 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார். அவரின் முன்புள்ள சவால்கள் என்ன என்பதை பார்க்காலம்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு விட்டன. கட்சித் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது, இதில் போட்டியின்றி ஒரு மனதாக ராகுல் தேர்ந்தெடுக்கப்படவே வாய்ப்புகள் உள்ளன.
1885ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சி. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸில் திரும்பிய திசையெங்கும் பெருந்தலைவர்களாக வலம் வந்தனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் நேரு மறைவைத் தொடர்ந்து காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.காமராஜர் தாம் பிரதமர் நாற்காலியில் அமராமல் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கினார். தமிழகத்தில் காமராஜர் தோல்வியை சந்திக்க தொடங்கிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்திராவின் பிடிக்குள் போனது. காங்கிரஸ் பிளவுகளை சந்தித்த போதும் இந்திராவின் காங்கிரஸாகவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இருந்தது.

What are the real challenges in front of new congress President Rahulgandhi, the fifth generation from Nehru family. How he rebuild the party?

Free Traffic Exchange

Videos similaires