சசிகலாவின் குடும்பத்தினரின் வாழ்க்கை சிறையில்தான் முடியும் என்றும் தினகரனுக்காகவே சிறைச்சாலைகள் காத்துக் கிடக்கின்றன என்றும் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்தார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சன் நியூஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் பழ.கருப்பையா கூறுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். அவர்கள் எவ்வளவு வெற்றி கரமாக திகழமுடியும் என்பது அவர்கள் செயல்படுகிற நிலையை பொருத்தது ஆகும்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது சிதம்பர ரகசியம். அவருக்கே தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை. ஜெயலலிதா இருந்தபோதே கமலுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். ஆனால் சினிமா தொழிலை விட்டு விட கூடாது என்பதற்காக அவர் அப்போது அரசியலுக்கு வரவில்லை.வருவதென்றால் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். முதலில் கமல் பணம் திரட்டினார். பிறகு அந்த பணத்தை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்தார். அடுத்த மாதம் கட்சியை தொடங்குவார் என்றால் அந்த பணத்தை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. அவர் இன்னும் பின்தங்குகிறார். எனவே பணத்தை ஏன் வைத்திருக்கிறார் என்ற கேள்வி வரும் என்பதற்காக அவர் திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
Pazha Karuppaiah says that Prisons are waiting for Dinakaran. Sasikala's family members life will end in prison.