கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தீரன் திரைப்படம் பல தரப்பினராலும், பாரட்டுப்பெற்று வருகிறது. இதில் உண்மையான தீரன் யார் என்கிற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது. வினோத் ஹரிமூர்த்தி இயக்கத்தில், கார்த்திக் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் 'தீரன்'. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள போலீஸ் கதை என்று பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் பார்த்த எல்லோருக்கும் எழும் முதல் கேள்வியே, உண்மையில் யார் அந்த தீரன்? என்பதே.
1994 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் உள்ள வீடுகளை கொள்ளையடித்த கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரிகள் குறித்த இந்தக் கதை ஒரு உண்மைச் சம்பவம். படத்தில் தீரனாக சித்தரிக்கப்பட்டது அப்போதைய ஐ.ஜி.,யாக இருந்த ஜாங்கிட் ஐ.பி.எஸ் தான். இவர் தற்போது பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.ஜி.பி.,ஆக இருக்கிறார்.
வடமாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வரும் லாரி ஓட்டுனர்கள் திரும்பிச் செல்லும் போது நெடுஞ்சாலைகளில் இருக்கும் வீடுகளைத் தாக்கி அங்கு இருப்பவர்களை கடுமையாகத் தாக்கி கொள்ளையடித்துச் செல்வதே வழக்கமாகி இருந்தது.
The Real Incidents behind the script of Theeran Movie. DGP Jangit IPS is Real Theeran who captured the Baveria gang of culprits.