சின்னம்மா ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. ஓ.பி.எஸ்க்கு ஒரு நியாயம், ஜெயா ப்ளஸ்க்கு ஒரு நியாயமா?- வீடியோ

2017-11-20 1

ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தலைமையிலான அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்த போது திமுகவினைரை பார்த்து சிரித்தார் என்று சொன்னார் சசிகலா, ஆனால் இன்று அவர்களது குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் துரைமுருகனின் பேட்டி ஒளிபரப்பானது சின்னம்மாவிற்கு தெரியுமா? சசிகலா தலைமையில் அதிமுக செயல்படத் தொடங்கியதும் சைலன்டாக பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம். திடீரென பிப்ரவரி 7ம் தேதி இரவு ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்துவிட்டு வந்து சசிகலா குடும்பம் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக கூறினார்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் பேசுவதில் உள்நோக்கம் இருப்பதாகச் சொன்னார் சசிகலா. ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் திமுகவினரை பார்த்து சிரித்த போது தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், மற்ற அமைச்சர்கள் இது பற்றி கூறிய போது பொருத்திருக்கலாம் என்று சொன்னதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இன்று தன்னுடைய குடும்பத்தார் நிர்வகிக்கப்படும் ஜெயா தொலைக்காட்சியில் திமுக சீனியர் தலைவரின் நேர்காணல் ஒளிபரப்பபட்டதற்கு என்ன சொல்வார்.

What Sasikala will say now for Jaya plus telecasted DMK senior leader Duraimurugan interview for the first time in Jayaplus as she always accuses DMK and told the reason behind O.Paneerselam opposition is too DMK?

Videos similaires