வேதா இல்லத்தில் வருமான வரி சோதனை- வீடியோ

2017-11-18 519

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது மறைவிற்கு பிறகு வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா இல்லத்தில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். நீதிமன்றமும் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு அனுமதியளித்ததையடுத்து நேற்று இரவு 3பேர் கொண்ட அதிகாரிகள் தலைமையில் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர்.

Dis: Income Tax officials are conducting raids at Veda House in Poyas garden where Jayalalithaa, the late Chief Minister

Videos similaires