ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்களை சசிகலா குடும்பத்தினர் பதுக்கி வைத்திருக்கலாம் என்பதால் அங்கு ரெய்டு நடைபெற்றிருக்கலாம் என தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அவருக்கு பரீட்சயமானவர்கள் வீடு என 187 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கூறப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தொண்டர்கள் அவருக்கு எழுதிய கடிதங்களையும், பென் டிரைவ்களையும், கொண்டு சென்றனர்.
Why officials conducted raids in Jayalalitha's poes garden? Is there any important documents kept by Sasikala and her family there?