ஜெ. புகழ் குன்கா மீண்டும் அதிரடி.. 20 பெண்களைக் கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை- வீடியோ

2017-11-18 9

20 பெண்களை பலாத்காரம் செய்து விட்டு சயனைடு கொடுத்து கொன்ற மோகனின் தூக்கு தண்டனையை கர்நாடாகா உயர்நீதிமன்றத்தின் ஜான் மைக்கேல் டி குன்கா அமர்வு உறுதி செய்துள்ளது. கர்நாடகாவில் உள்ள தென்கனராவை சேர்ந்தவர் மோகன் என்ற சயனைடு மோகன் (48). ஆதரவற்ற மற்றும் கணவனை பிரிந்த இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு சயனைடு கொடுத்து கொலை செய்து வந்தார். 20க்கும் அதிகமான பெண்கள் இவரால் சயனைடு கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2009ல் மோகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தென்கனரா நீதிமன்றம், 2013ம் ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதேபோல் மேலும் 3 வழக்கிலும் தண்டனை வழங்கப்பட்டது. ஒரு வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் கர்நாடக உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. மற்ற வழக்குகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


The Karnataka high court on Wednesday upheld the death penalty imposed upon serial killer Cyanide Mohan in relation to murder of one Sunanda , a resident of Sullia in February 2008.

Videos similaires