நள்ளிரவில் டிரைவர் ராஜாவுடன் போயஸ் இல்லம் வந்த தீபா! மாதவன் எங்கே?- வீடியோ

2017-11-18 4,944

சென்னை: போயஸ் இல்லத்தில் ஐடி ரெய்டு நடைபெற்றபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு வந்து தன்னை உள்ளேவிடுமாறு தகராறு செய்தார்.

இரவு 10 மணியளவில் போயஸ் இல்லத்தில் ரெய்டு ஆரம்பித்த நிலையில், தீபா சுமார் 12 மணிக்கு மேல் அங்கு வந்தார். போயஸ் இல்லத்தின் வாரிசு தான்தான் என்றும், தனக்கு நோட்டீஸ் தராமல் எப்படி வீட்டுக்குள் போகலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தன்னை உள்ளேவிடும்படி போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அதிகாலை 2 மணிவரை சோதனை நடைபெற்ற நிலையில், தீபாவை உள்ளேவிடவில்லை. வாக்குவாதம் இது ஒருபக்கம் இருக்க தீபாவுடன் வந்திருந்த அவரின் டிரைவர் ராஜா, மீடியாக்கள் கவனத்தை ஈர்த்தார். தீபா போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தியபோது அவரும் உடன்தான் நின்றிருந்தார். சும்மா நின்றார் தீபாவுக்கு ஆதரவாக அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் அங்கேயே ஒரு மெய்க்காப்பாளரை போல நின்றிருந்தார். ரெய்டு முடிந்த பிறகு தீபா கிளம்பியதும், ராஜாவும் அவருடன் கிளம்பி சென்றார்.


Why Deepa's husband Madavan didn't came to poes garden whilehis wife went there?

Videos similaires