கங்குலி சாதனையை முறியடிக்கும் முன் கபில் சாதனையை சமன் செய்த கோஹ்லி!- வீடியோ

2017-11-18 622

கேப்டனாக அதிக டெஸ்ட்களில் வெற்றி என்ற சாதனைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்துள்ளார். மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி–20 போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. இதில் டெஸ்ட் போட்டித் தொடர், கோல்கத்தாவில் நேற்று துவங்கியது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்தியா முதல் நாள் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல், முதல் பந்தில் டக் அவுட்டாகி புதிய சாதனைப் படைத்தார். முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ். லக்ஷ்மன், டபுள்யூ.வி ராமன், சுதிர் நாயக், சிவசுந்தர் தாஸ், வாசிம் ஜாபர், போன்றோர் டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் அவுட் ஆகியுள்ளனர். அந்தப் பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.

Indian captain Virat Kholi equals Kapil’s record

Videos similaires