சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கும் 'திருட்டு பயலே -2' படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோர் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான படம் 'திருட்டு பயலே'. கதையின் கருப்பொருளினால் சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகமான 'திருட்டு பயலே -2' படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கள்ளக்காதல் மற்றும் அதன் எதிரொலியால் நிகழும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை எனச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா போலீசாக நடித்திருக்கிறார். அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கும் காட்சிகளும் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கின்றன.
Thiruttu payale 2' teaser out now officially. The film 'thiruttu payale 2' lead by amala paul and bobby simha directed by Susi ganesan.