என்னை பார்த்து ஊரே சிரிக்குது...கலங்கினார் நெஹ்ரா- வீடியோ

2017-11-17 5,636

இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நெஹ்ரா தற்போது கிரிக்கெட் கமெண்டரி பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது கிரிக்கெட் கமெண்டரியில் ஈடுபடுவதால் உண்டாகும் கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா இந்திய அணியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். நவம்பர் 1ம் தேதி நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியே அவர் விளையாடிய கடைசி போட்டியாகும். ஓய்வுக்கு பின் அவர் என்ன செய்வார் பலரும் தங்களது யுகங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் தற்போது நடக்கும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் கமெண்டரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். தற்போது இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அதில் அவர் ''காலையில் நான் கோட் போட்டுக் கொண்டு வந்ததை பார்த்த பலர் சிரித்தனர். ரசிகர்கள் பலர் மோசமாக கத்தினர். இந்திய அணியில் கூட என்னை பார்த்து சிலர் சிரித்தனர்.

Nehra speaks about his commentary box experience. He says everybody had a laugh about his new role.

Videos similaires