16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர் தி டாப் படத்தில் நடித்த போது 1986ம் ஆண்டில் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன் படப்பிடிப்புக்காக லாஸ் வேகாஸ் சென்றுள்ளார். அப்போது அவர் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரை தெரிவித்துள்ளதே பாதிக்கப்பட்ட பெண் தான். இது குறித்து அந்த பெண் கூறியிருப்பதாவது, லாஸ் வேகாஸில் ஸ்டலோனிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றேன். அப்போது எனக்கு வயது 16, அவருக்கு 40. ஸ்டலோனின் பாடிகார்டு டீ லூகா(27) ஹோட்டல் ரூம் அறையின் சாவியை என்னிடம் கொடுத்தார். ஸ்டலோனை முந்தைய நாள் நான் சந்தித்தபோதும் என் தோழிக்காக ஆட்டோகிராப் வாங்க அவரின் ஹோட்டல் அறைக்கு சென்றேன். அங்கு நானும், ஸ்டலோனும் உறவு கொண்டோம். பாடிகார்டு பாத்ரூமில் இருந்தார்.