விண்வெளிக்கு பீட்ஸா டெலிவரி செய்த நாசா...வீடியோ

2017-11-16 1,491

விண்வெளி வீரர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாசா தனது ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு பீட்ஸா டெலிவரி செய்து இருக்கிறது. மேலும் பீட்ஸாவுடன் ஐஸ்கிரீம், சாக்லேட் என நிறைய சர்ப்ரைஸ் கிப்டுகளை கொடுத்து இருக்கிறது. 'பாப்லோ நெஸ்போலி' என்ற விண்வெளி வீரரின் பல நாள் ஆசையை நிறைவேற்றவே நாசா இந்த செயலை செய்து இருக்கிறது.

இவர் நீண்ட நாட்களாக நாசாவிடம் பீட்ஸா வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார். மீண்டும் அவர் இது போல பீட்ஸாவுக்கு ஆடம் பிடிக்க கூடாது என்பதற்க்காக வித்தியாசமான வசதி ஒன்றையும் வானத்தில் செய்து கொடுத்து இருக்கிறது. தற்போது பாப்லோ, நாசாவுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
விண்வெளியில் ஆராய்ச்சி மையம் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்காவின் நாசா நிறுவனம் விண்வெளியில் ஐந்துக்கும் அதிகமான விண்வெளி ஆராய்ச்சி மையங்களை நிர்வகித்து வருகிறது. இங்கு மாசக்கணக்கில் தங்கி விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். பூமியை மட்டும் இல்லாமல் மற்ற கிரகங்களையும் இவர்கள் விண்வெளியில் இருந்து ஆராய்ச்சி செய்வார்கள். இவர்களுக்கு கேப்சுல் வடிவில் உணவு அனுப்பப்படும்.

NASA delivers pizza to space for its Astronauts. It also delivers a machine which can create pizza and ice creams.