நட்சத்திர ஓட்டலில் நடந்த தகராறில் அனிருத் இருந்த வீடியோ ஆதாரம்
ஓட்டலில் மது அருந்தி ரகளையில் ஈடுபட்ட விவகாரத்தில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் போலீசார் தன்னிடமும் விசாரணை நடத்த கூடும் என்று பயந்து நடிகர் கருணாஸ் தலைமறைவாகியுள்ளார்.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு நடிகர் கருணாஸ் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது தொழிலதிபர் பரணிதரனுக்கும் கருணாசின் நண்பர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பரணிதரன் கடுமையாக தாக்கப்பட்டார். இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாசின் நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த போது நடிகர் கருணாஸ் சம்பவ இடத்தில் இல்லை என்று கூறி அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர். ஆனால் ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமிராவில் கருணாஸ் சம்பவ இடத்தில் இருந்தது பதிவாகியுள்ளது. எனவே கருணாசும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீசார் விசாரணைக்கு பயந்துள்ள கருணாஸ் தனது மொபைல்களை சுச்சுஆப் செய்துள்ளதுடன் தலைமறைவாகியுள்ளார். கருணாசிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் போலீசார் அவரை தொடர்பு கொள்ள பல கோணங்களில் முயற்சி செய்து வருகின்றனர்.