'செக்ஸி துர்கா' படத்தை திரைப்பட விழாவில் வெளியிட தடை -அரசை எதிர்த்து மூவர் ராஜினாமா!- வீடியோ

2017-11-16 401

கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படாமல் 'செக்ஸி துர்கா' படம் தடுக்கப்பட்டது மலையாள திரையுலகில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. சணல் குமார் சசிதரன் இயக்கிய 'செக்ஸி துர்கா', மற்றும் 'நியூட்' ஆகிய இரு படங்கள் திரையிடலில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை அள்ளும் மலையாள இயக்குனர்களில் ஒருவர் தான் சணல் குமார் சசிதரன். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு 'செக்ஸி துர்கா' என டைட்டில் வைத்துள்ளார். இந்தப் படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பால் 'எஸ்.துர்கா' என சென்சார் போர்டு வழிமுறைகளின்படி டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. 'எனது படத்தின் துர்கா கேரக்டர் மதம் சார்ந்து எந்தப் பிரச்னைகளையும் கிளப்பாது. நீங்கள் எஸ். துர்கா, ஏ.துர்கா, பி.துர்கா என என்ன பெயரில் மாற்றினாலும் அது செக்ஸி துர்காவாகத்தான் தொடரும்' என இந்தப் படத்தின் இயக்குநர் சணல் குமார் சசிதரன் கோபமாகப் பேசியுள்ளார். கேரளாவில் தற்போது சமூகத்தை அச்சுறுத்தி வரும் ஒரு விஷயத்தை நையாண்டி செய்து படமாக்கி இருக்கிறாராம் சணல் குமார் சசிதரன். அதனால் படம் ஆரம்பித்ததில் இருந்தே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தார்.

The film 'Sexy Durga' has been blocked in the Goa film festival. Jury Chairman Sujay Ghosh and two other Jury members have resigned their post against government.

Videos similaires