துப்பாக்கியால் சுட்ட பிறகும் கொள்ளையர்களை தடுத்த ஏடிஎம் காவலாளி! திக், திக் வீடியோ

2017-11-16 5,407

டெல்லியில் தன்னை துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்களை விடாமல் விரட்டியடித்துள்ளார் ஏடிஎம் காவலாளி ஒருவர். அந்த சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. திரைப்படங்களில் மட்டுமே ஹீரோக்கள் நடமாடுவதில்லை. நிஜத்திலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது இந்த சம்பவம். டெல்லியிலுள்ள மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் ஒன்றில் நடைபெற்ற இந்த திகில் காட்சி காண்போரை கலங்கடிக்கிறது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

பார்த்தால் பகல் பொழுதாக தெரிகிறது. அப்படியும் தைரியமாக பைக்கில் துப்பாக்கிகளுடன் வருகிறார்கள் 2 கொள்ளையர்கள். பைக்கை விட்டு இறங்கியதுமே, ரிவால்வரால் ஏடிஎம் காவலாளியின் காலில் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். இதையடுத்து மற்றொருவன் ஏடிஎம் வாசல் கதவை மிதித்து உடைக்க முற்படுகிறான். ஏடிஎம் மையத்திற்குள் பணம் எடுக்க வந்த ஒருவர், இந்த களேபரத்தை பார்த்து அஞ்சி நைசாக வெளியே ஓடுகிறார்.

A CCTV footage now released by ANI showed how the assailants stopped beside the ATM, shot the unassuming guard in his leg and tried to storm inside the ATM.

Videos similaires