40 ஆண்டுகால "ஜாம்".. ஜம் ஜம் நடவடிக்கையால் தீர்த்து அசத்திய ஆரணி டிஎஸ்பி-வீடியோ

2017-11-16 6

பட்டு நகரம் எனப்படும் ஆரணியில் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த போக்குவரத்து பிரச்சினைக்கு புதிதாக வந்த டிஎஸ்பி ஜெரினா பேகம் தீர்வு கண்டுள்ளார். இதனால் ஆரணி சாலைகள் விசாலமாக காட்சியளிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியானது நகராட்சியாகும். இந்த நகரம் பட்டு மற்றும் அரிசிக்கு பெயர் பெற்றதாகும்.
திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்களுக்கு காஞ்சிபுரம் செல்ல முடியாதவர்கள் ஆரணியில் வந்து வாங்கிச் செல்வர். அதேபோல் ஆரணி அரிசியை சாப்பிட்டு வளர்ந்தவர்கள் இன்று பணி நிமித்தமாகவும் திருமணமாகி வேறு நகரங்களில் செட்டில் ஆகினாலும் ஓவ்வொரு பயணத்தின்போது ஆரணி அரிசியை வாங்கி செல்வதை தவறுவதில்லை

இத்தகைய பெருமைமிக்க ஆரணி நகரமானது 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் வியாபாரத்தை விஸ்தரிக்க வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்ததால் சாலைகள் குறுகலாகிவிட்டன

Arni Silk City has severely affected in encroachments and traffice jam for 40 years. Now a New DSP Jarina Begum has taken initiative and then cleared the encrochments in a short period.

Free Traffic Exchange

Videos similaires