பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் தைரியமானவர்களா?- வீடியோ

2017-11-16 379

பெண் கெட்ட வார்த்தை பேசினால் அதை வைத்து தான் அவர் தைரியசாலி என்பதை காட்டலாம் என்பது போன்ற ஒரு தப்பான முன் உதாரணத்தை இயக்குநர் பாலா தன்னுடைய நாச்சியார் படமும் சொல்ல வருகிறாரா?
இயக்குனர் பாலா படம் என்றாலே கதையில் தொடங்கி பட ரிலீஸ் வரை அனைத்திலுமே சர்ச்சை தொடங்கிவிடும். இதற்கு நேற்று ரீலிசான பாலாவின் நாச்சியார் டீசரும் விதிவிலக்கல்ல. பாலா படம் என்றாலே அதில் "கவுச்சி" நெடி தூக்கலாகவே இருக்கும். இதை அவரின் எல்லா படத்திலும் மக்கள் உணர்ந்திருப்பார்கள். எதார்த்தத்தை காட்டினாலும், திரையில் பார்க்கும் போது அது பலருக்கு முகசுளிப்பையே தந்திருக்கிறது. தமிழ் சினிமா புரட்சியாளர், உழைக்கும் மக்களின் உண்மை வாழ்க்கையை செல்லுலாய்டு திரையில் காட்டுபவர் என்றெல்லாம் பாலா பாராட்டப் பெற்றிருந்தாலும், அவருக்கான தரத்திலிருந்து அவர் அடிக்கடி இறங்கி விடுவது யோசிக்க வைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய படத்தில் இடம்பெறும் வசனங்களும், சரளமாக புரண்டோடும் கெட்ட வார்த்தைகளுமே. என்ன தான் நிதர்சனமாக இருந்தாலும் அதை ஏன் படம் முழுவதிலும் வைக்க வேண்டும் என்பது தான் கேள்வி.

Is this the way if a woman speaks bad words it means she is bold and strong, Why Director Bala is depicting Jothika like that in his Nachiyar movie, sensational arise in social medias.

Videos similaires