ஆந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆந்திர அரசின் 13 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக விருது வழங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது.
இதில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி படம் 2015-ம் ஆண்டுக்கான 13 நந்தி விருதுகளை வென்று இருக்கிறது.
சிறந்த படம், சிறந்த இயக்குனர், துணை நடிகர் - நடிகைகள், சிறந்த வில்லன், இசை, பின்னணி பாடகர், சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர், டப்பிங் ஆகிய 13 நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
2015-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது சைஸ் ஜீரோ படத்தில் நடித்த அனுஷ்காவுக்கும், 2014-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது கீதாஞ்சலி படத்தில் நடித்த அஞ்சலிக்கும் வழங்கப்படுகிறது.
திரைப்படத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் என்.டி.ஆர். தேசிய விருது கமல்ஹாசன் (2014), ரஜினிகாந்த் (2016) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/11/15114512/1128922/Baahubali-gets-13-Andhra-government-awards.vpf