நான் ஒன்னும் ரோபோ கிடையாது... விராத் கோஹ்லி ஆவேசம்- வீடியோ

2017-11-16 7,836

தான் ஒன்றும் ரோபோ கிடையாது என்றும் தனது தோலை சீவினாலும் ரத்தம்தான் வரும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்தியா- இலங்கை இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டிகள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறுகிறது. இதையொட்டி கோஹ்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஹர்திக் பாண்ட்யா முதல் இரு தொடர்களில் விளையாடாமல் ஓய்வில் இருப்பது குறித்து கோஹ்லியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கோஹ்லி பதிலளிக்கையில், களத்தில் நீண்ட நேரம் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு என்பது தேவை.

சில நேரங்களில் எங்களது சூழ்நிலைகளை அனைவரும் புரிந்து கொள்வதில்லை. வேலைப்பளு காரணமாக ஒரு வீரருக்கு ஓய்வு தேவையா அல்லது வேண்டாமா என்பது குறித்து வெளியே ஏராளமான பேச்சுகள் ஓடி கொண்டிருக்கின்றன. ஒரு ஆண்டுக்கு 40 போட்டிகளில் வீரர்கள் விளையாடுகின்றனர்

India skipper Virat Kohli on Wednesday said that when he feels he needs rest, he will ask for it. He is not a robot anyone can slice his skin and check he bleeds

Videos similaires