வருமான வரித்துறை அதிகாரிகள் முன் ஜெயா டிவி மேலாளர் மற்றும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா நேரில் ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் கிடுக்கி பிடி கேள்விகளை கேட்டதால் பதிலளிக்க முடியாமல் தினறினர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் கிருஷ்ணபிரியா வீடு மற்றும் ஜெயாடிவி நமது எம்ஜிஆர் அலுவலகம், சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத நகை பணங்களை கைப்பற்றினர். இது குறித்து ஜெயாடிவி நிர்வாக இயக்குனர் விவேக்கிடம் விசாரணை நடத்தினர். அது போல் கொடநாடு எஸ்டேட் மேலாளர் திவாகரன், ஜெயாடிவி மேலாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் இளவரசின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் கைப்பற்ற ஆவணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் நேரில் ஆஜாராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். அதிகாரிகளின் சம்மன்னுக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கிருஷ்ணபிரியா இன்று வருமான வரி அலுலகத்திற்கு வந்தார். அவரிடம் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களின் விவரங்கள் குறித்து அதிகாரிகள் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கிருஷ்ணபிரியா தவித்தார். ஒருசில கேள்விகளுக்கு அவர் மலுப்பியும் உள்ளார். இதேபோல் ஜெயா டிவி மேலாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தனக்கு ஏதும் தெரியாது என்றும் ஒருசில கேள்விகளுக்கு நிர்வாக இயக்குனரான விவேக்கிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது பதில்கள் அனைத்தையும் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பினால் கண்டிப்பாக வர வேண்டும் என்றும் காரணங்களை காட்டி ஆஜராகாமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.