கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில் எப்படியெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்கிற ஐ.எஸ். தீவிரவாதிகளின் பகீர் சதித் திட்டம் தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதனை கேரளா போலீஸ் உறுதி செய்தும் உள்ளது.
இந்நிலையில் கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்துவது எப்படி என்பது தொடர்பான ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆடியோ ஒன்று வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. மலையாள மொழியில் பேசப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருச்சூர் பூரம் மற்றும் கும்பமேளாவில் முதலில் உணவில் விஷத்தைக் கலக்க வேண்டும். அதன் பின்னர் கூட்ட நெரிசலில் வாகனங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்த வேண்டும். இப்படியான தாக்குதல் முறையை உலகம் முழுவதும் ஐ.எஸ். இயக்கம் கடைபிடித்து வருகிறது.