காதலியிடம் கெத்து காண்பிக்க... பைக் திருடிய இளைஞர்- வீடியோ

2017-11-15 6,293

நாகர்கோவிலில் காதலியிடம் கெத்து காண்பிப்பதற்காக பைக் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில், ஆரல்வாய்மொழி பகுதிகளில் தொடர்ச்சியாக பைக்குகள் திருடப்பட்டு வந்தன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, எஸ்.பி. துரை உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
சம்பவத்தன்று வடசேரி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த நெல்லை மாவட்டம், வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்ற கார்த்திக் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், வடசேரி காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு பைக் திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதியானது. மேலும் ஒரு சில இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்பிட்டு பார்த்ததில், அதில் பதிவாகி இருந்த வாலிபர் கருத்தப்பாண்டி தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.இதையடுத்து கருத்தப்பாண்டியை கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் 21 பைக்குகளை மீட்டனர். ஆரல்வாய்மொழி, கோட்டார், நேசமணிநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் கருத்தப்பாண்டி பைக் திருட்டில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.

A youth from Nagercoil has theft the two wheeler to meet his lover, police arrested him in theft case.

Videos similaires