புதுவையில் ஆளுநர் கிரண்பேடியை போல் களத்தில் இறங்கிய தமிழக ஆளுவர் பன்வாரிலால் புரோஹித்தும் கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். தமிழகத்துக்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்றுக் கொண்டார். தற்போது தமிழக மக்களுடன் தமிழில் கலந்துரையாட தமிழ் ஆசிரியர் மூலம் தமிழ் பயின்று வருகிறார்.
இந்நிலையில் கோவையில் நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கோவையில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்தினார். காந்திபுரம் பேருந்து நிலைத்தில் சுமார் 20 நிமிடங்கள் அவர் ஆய்வு நடத்தினார். ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
TN Governor Banwarilal conducted his review in Coimbatore Bus stand.He is acting like Pondy Governor Kiran Bedi.