டெல்லியோடு இணக்கமாக இருப்பதாக சிக்னல் கொடுத்தும் சாம்ராஜ்யத்தையே சிதைத்துவிட்டதில் ரொம்பவே சீறிக் கொண்டிருக்கிறாராம் சிறைப்பறவை சசிகலா. இப்போது டெல்லியுடன் இணக்கமாக போங்கள் என அறிவுறுத்திய தூதருக்கு சிறையில் வந்து சந்திக்க ஓலை அனுப்பியிருக்கிறாராம் 'சின்னம்மா'.
சென்னை முதல் மன்னை வரை வெலவெலத்துக் கிடக்கிறது சசிகலா சர்க்கார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் அப்பட்டமாக தனி அரசாங்கமே நடத்துவது; ஜெயலலிதா ஆட்சியில் இல்லாதபோது குட்டி சமஸ்தானத்தை தங்களது உறவுகளைக் கொண்டு நடத்துவதுதான் சசிகலா ஸ்டைல்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ மகாராணியாகப் போகிற மமதையில் வலம் வந்தார் சசிகலா. காலம் அவருக்கு காராக்கிரத்துக்குத்தான் அனுப்பி வைத்திருக்கிறது. தமது சாம்ராஜ்யத்தின் இளைய பட்டமாக தினகரனை நிறுத்த முயற்சித்தார்கள். அவரை டெல்லி திஹார் சிறைதான் வரவேற்றது.எப்பவும்போல் பினாமிகளைக் கொண்டு ஆட்சி நடத்த எத்தனித்த சசிகலா உறவுகளுக்கு எதிர்பாராத ஏமாற்றங்கள். இதன் உச்சமாக இப்போது ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தை சீட்டு கட்டுபோல சரித்துப் போட்டு வைத்திருக்கிறது இந்தியா இதுவரை கண்டிராத மாபெரும் வருமான வரி சோதனை.
Sources said that Sasikala who served the Jail term in Bengaluru very disappointed over AIADMK Party's Delhi emissary on the IT Raid issue.