'கேரள அரசு உறுதி செய்தால் அமலாபாலுக்கு தண்டனை-அமைச்சர் திட்டவட்டம்- வீடியோ

2017-11-14 1,864

நடிகை அமலாபால் கார் பதிவு செய்ததில் சட்ட விதிகளை மீறவில்லை என புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய கார் பதிவு செய்ததில் அவர் போலி முகவரியைக் கொடுத்து சட்டத்தை மீறி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ள அமலா பாலிடம் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு புதுச்சேரி போக்குவரத்துத் துறைச் செயலருக்கு கவர்னர் கிரண் பேடி உத்தரவிட்டார். அமலாபால், கேரளாவில் வாகனத்தைப் பதிவு செய்யாமல் பாண்டிச்சேரியில் வரி குறைவு என்பதற்காக போலியான முகவரியைக் கொடுத்து பதிவு செய்ததால் கேரள மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகை கிடைக்காமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. நான் சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை என அமலா பால் விளக்கம் அளித்தார்.

Puducherry Union Minister of Transport, Shajahan said, "If the Kerala government confirms that the car was registered in the fake address, then Amala Paul will be legally enforced."

Videos similaires