டி-20 போட்டிகளில் விளையாடலாமா கூடாதா என்று மற்றவர்கள் விவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையில், இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் கிரிக்கெட் அகாதெமியை, துபாயில் ஆரம்பித்துள்ளார் தல டோணி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோணி, சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் மெதுவாக விளையாடியதாக முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
36 வயதாகும் டோணி, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மண் முதலில் கூற, இதுதான்டா சான்ஸ் என்று பல முன்னாள் வீரர்கள் டோணிக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர். அதே நேரத்தில் கேப்டன் விராட் கோஹ்லி, கோச் ரவி சாஸ்திரி மற்றும் பல முன்னாள் வீரர்கள் டோணிக்கு விசில் போடு என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Indian cricketer Dhoni starts Academy in Dubai