மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி- வீடியோ

2017-11-13 44

பிரதமர் நரேந்திர மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் சந்தித்து கொண்டது திமுக ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலாவின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தியதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றார். பிற மாநிலங்களில் பாஜக பிரமுகர்களின் வீடுகளிலேயே வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சென்றதால் திமுக ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Dis : Prime Minister Narendra Modi and DMK chief M Karunanidhi met with fears of DMK parasites

Videos similaires