இரண்டு நாளைக்கு மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம்- வீடியோ

2017-11-13 275

தென் மேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.

வங்ககடலில் இலங்கைக்கு அருகில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிகத்தில் கடந்த 31ம் தேதி முதல் கனமழை பெய்து வந்தது. சென்னையில் பெய்த தொடர் மழையால் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனிடையில் இலங்கை கடற்பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்ததால் மழை பொழிவும் நின்றது. இதனிடையில் அந்தமான் அருகே கடந்த 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இதனால் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. கடலூர், ராம்நாடு, இராமேஸ்வரம். நாகை , வேதாரண்யம், திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் மீண்டும் இலங்கைக்கு அருகே மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது. மழையின் காரணமாக சென்னையில் ஒருசில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Dis : The Meteorological Center has said that rains in the South West Bengal are continuing to stay in the same area for two more days in the coastal districts of Tamil Nadu.

Videos similaires