மூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தாங்கன்னு இப்ப புரியுது.. எஸ்.வி.சேகர்- வீடியோ

2017-11-13 18,909

நாக்குல சனி நடனமாடுகிறார் என தம்பிதுரையை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் சரமாரியாக சாடியுள்ளார்.

எஸ்வி சேகர் டிவிட்டர் வாயிலாக அரசியல் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். பாஜக பிரமுகரான எஸ்வி சேகர் எதிர்க்கட்சிகளையும் தனது டிவிட்டுகள் மூலமாக வாரி வருகிறார்.
மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதையும் அவர் ஆதரித்து வருகிறார். சசிகலா குடும்பத்தில் நடைபெறும் வருமான வரித்துறை ரெய்டு மற்றும் அதிமுக எம்பியான தம்பிதுரையின் பேச்சு குறித்தும் எஸ்வி சேகர் விளாசியுள்ளார்.

ஜெயலலிதாவின் கொள்கை வழியிலே மத்தியில் உள்ள பா ஜ க அரசு செயல்படுகின்றது. என துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதை அவரது பேத்தல் பேச்சு என சாடியுள்ளார் எஸ்விசேகர். இவர்களை இத்தனை வருஷம் பேச விடாம காலடியிலேயே மூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தங்கன்னு இப்பதான் புரியுது என்றும் எஸ்வி சேகர் தனது டிவிட்டில் கூறியுள்ளார்.

Actor SV Shekar slams ADMK MP Thambidurai and TTV Dinakaran. He said tax evasion also a kind of terrorism.