இந்திய அணிக்கு மீண்டும் திரும்புகிறார் யுவராஜ் சிங்- வீடியோ

2017-11-13 1,388

இடது கை மன்னன் யுவராஜ் சிங் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்து இருக்கிறார். மேலும் யுவராஜ் சிங் நல்ல பார்மில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய அணியில் சேர்வதற்கு செய்யப்படும் தேர்வுகளில் ஒன்றான யோ- யோ டெஸ்டை யுவராஜ் சிங் எளிதாக வெல்வார் எனவும் அசாருதீன் தெரிவித்தார். மேலும் சில நாட்களுக்கு முன் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்த ரெய்னாவின் உடல் தகுதியையும் பாராட்டியும் அவர் பேசி இருக்கிறார்.கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பின் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியாமல் யுவராஜ் சிங் திணறி வருகிறார். இந்திய அணி மட்டும் இல்லாமல் ரஞ்சி அணியிலும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. பாண்டியா, ராகுல், தினேஷ் கார்த்திக் என அவரது இடத்தில் ஆட நிறைய வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் அவரது வாய்ப்பு கானல் நீராக மாறியிருக்கிறது.யுவராஜ் சிங் தற்போது யோ யோ டெஸ்டில் கலந்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார். இந்த டெஸ்டில் சில நாட்களுக்கு முன் அஸ்வின் சிறப்பாக பர்பார்ம் செய்து இருந்தார். ஆனால் முன்னணி வீரரான ரெய்னா இதில் பெரிய அளவில் சொதப்பினார். தற்போது இதில் கலந்து கொண்டு தனது உடல் தகுதியை நிரூபிக்க யுவராஜ் சிங் முடிவு செய்து இருக்கிறார்.


Former Indian Captain Mohammad Azharuddin says Yuvraj Singh will be back to Indian. He also says that Yuvraj will clear the Yo-Yo test.

Free Traffic Exchange

Videos similaires