சென்னையில் இன்றும் நாளையும் பலத்த மழை பொழியுமாம்- வீடியோ

2017-11-13 12,575

இன்றும் நாளையும் விட்டு விட்டு பலத்த மழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சனிக்கிழமை இரவு முதலே சென்னையில் மழை கொட்டும் என நார்வே மற்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்தன.

அதற்கேற்றார் போலவே சென்னை பகுதியில் கடும் மேக கூட்டம் சூழ்ந்திருந்தது. ஆனால் சனிக்கிழமை இரவு முதலே சென்னையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் கடலிலேயே மழை கொட்டி தீர்த்துவிட்டதாக கூறப்பட்டது.
பெரும்பாலான மழை கடலில் பெய்ததால் சென்னை ஒரு நல்ல மழை இழந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடிமின்னலுடன் கனமழை கொட்டியது.

Heavy rains will be there in Chennai today and tomorrow said Norway meteorological center said. After wednesday rain will reduce Norway meteorological center said.

Free Traffic Exchange

Videos similaires