ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற சிடியை விசாரணை ஆணையத்தில் கொடுத்தால் அதில் சசிகலா நிரபராதி என்பது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியவரும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் இன்பத்தமிழன் தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்படும் மெகா ரெய்டு குறித்து சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரூ.900 கோடி பணமெல்லாம் தினகரன் தரப்பினரிடம் இல்லை. அது வேறு யாரிடம் உள்ளதோ எனக்கு தெரியாது.ஜெயலலிதா சிகிச்சை பெறும் சிடியை வலைவீசி அதிகாரிகள் தேடி வருகின்றனர். அந்த சிடி எங்களிடம்தான் உள்ளது. ஆனால் யாரிடம் உள்ளது என்பதை சொல்ல மாட்டேன்அந்த சிடி மட்டும் விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தால் ஜெயலலிதா மரணத்துக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வரும். அவர் குற்றமற்றவர் என்பது வெளியுலகத்துக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே சிடியை தேடுகின்றனர்.
Ex Minister Inba Tamilan says that if Jayalalitha's Medical treatment CD submitted to the inquiry commission, people will know she is innocent.