விக்ரம் மகனை இயக்கம் பாலா வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!- வீடியோ

2017-11-11 4,694

விக்ரமின் மகன் துருவ்-வை வைத்து பாலா இயக்கும் படத்தின் முதல் தோற்ற வடிவமைப்பு இன்று வெளியானது. இந்தப் படத்துக்கு வர்மா எனத் தலைப்பிட்டுள்ளார் பாலா. விக்ரம் மகன் துருவ் நடிக்க வருகிறார் என கடந்த ஓராண்டாகவே செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அவரை பெரிய இயக்குநர் ஒருவர் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் காத்திருந்தார் விக்ரம். தனக்கு திரையுலகில் பெரும் திருப்புமுனை தந்த பாலாதான் தன் மகனுக்கு சரியான இயக்குநர் எனத் தீர்மானித்து அவரிடம் ஒப்படைத்தார் விக்ரம். படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி எந்த விவரமும் அதில் இல்லை. குறிப்பாக இசையமைப்பாளர் யார் என்பது தெரியவில்லை. வர்மா படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்குள் வெளியாகும் என்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக் பார்த்த பிறகு சரியான குருவிடம்தான் சிக்கியிருக்கிறார் விக்ரம் மகன்.

The First Look of Bala’s Directorial, Actor Vikram’s Son Dhruv Starring 'Varma' has released today

Videos similaires