எத்திராஜ் பொண்ணு.. குறும்படம் லக்ஷ்மி .. ட்ரெண்டாகும் 'லக்‌ஷ்மி' ப்ரியா யார் தெரியுமா?- வீடியோ

2017-11-11 3

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பேசப்படுவது 'லக்‌ஷ்மி' என்ற பெயர் தான். நெட்டிசன்ஸ் மத்தியில் சில நாட்களாக லக்‌ஷ்மி ஃபீவர் அடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு சில தினங்களுக்கு முன் வெளிவந்த 'லக்‌ஷ்மி' என்ற குறும்படம் தான். இதில் லக்‌ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த லக்ஷ்மி ப்ரியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லக்ஷ்மி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குறும்படம் கௌதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா சென்னை ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் படித்தவர். பிறகு எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க்ஸ் கல்லூரியில் பி.ஜி முடித்திருக்கிறார். பிறகு 'சுட்டகதை' என்ற படத்தில் லீட் ரோல் செய்திருந்தார் லக்‌ஷ்மி. 'கள்ளப்படம்', 'யாகாவாராயினும் நாகாக்க' உள்ளிட்ட படங்கள், அதைத் தொடர்ந்து 'மாயா' படத்தில் நடித்த இவருக்கு 'லக்‌ஷ்மி' குறும்படம் பெரும் திருப்பத்தை கொடுத்துள்ளது.


The 'Lakshmi' short film directed by Sarjun KM has created a huge debate on social networks. In this short film, Many of fans praised Actress Lakshmi Priya's performance.

Videos similaires