போருக்குத் தயாராகுங்கள் என்று ரஜினி அறிவித்ததிலிருந்து அவரது ரசிகர்களும், பொது மக்களும் ரஜினியின் அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் எனக் காத்திருக்கின்றனர். 'இப்போ நான் என் வேலையைப் பார்க்கிறேன்... நீங்க உங்க வேலையைப் பாருங்க' என்று கூறிய ரஜினி 2.ஓ மற்றும் காலா பட வேலைகளில் மும்முரமாக இருந்தார். இப்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பு, டப்பிங் உள்ளிட்ட எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார். அடுத்த படம் என்னவென்று அறிவிக்கவில்லை. இமயமலை, வெளிநாடு என எங்கும் செல்லவும் இல்லை. எப்போதுதான் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார்? ஏன் அமைகி காக்கிறார்? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில், "நிச்சயம் அறிவிப்பார். விரைவில் தன் அரசியல் திட்டங்களைப் பேசுவார்.
Sources say that Rajinikanth would be meet his fans on his birthday December 12th and revealed his political plans