சென்னையில் 2 நாள்களாக மழை ரெஸ்ட் எடுத்து வந்த நிலையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செம கூலாக உள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. அதுவும் சென்னையை பொருத்தவரை கடந்த 30-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை வெளுத்து வாங்கியது.
ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 6-ஆம் தேதிக்கு பின்னர் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதையடுத்து கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையில் வெயில் நிலவியது. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னையில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்அதேபோல் சென்னையில் வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்தது. மேலும் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையமும் தெரிவித்துள்ளது.
As a part of north east monsoon, rain had taken rest for 2 days ni Chennai. But today the climate is very cool and some places got light drizzling.