ஷூட்டிங்கில் வழுக்கி விழுந்து கீர்த்தி சுரேஷ் காயம்: வைரலான வீடியோ

2017-11-09 6

படப்பிடிப்பில் வழுக்கி விழுந்து கீர்த்தி சுரேஷ் காயம் என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். தமிழில் அவர் சூர்யாவுடன் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தெலுங்கில் சீனியர் ஹீரோக்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்கிறார்.வீடியோவில் ஆற்று நீரில் பெண் ஒருவர் ஆடும்போது வழுக்கி விழுகிறார். அந்த பெண் கீர்த்தி சுரேஷ் தான் கூறி ஆளாளுக்கு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.அந்த வீடியோவில் இருப்பது நீங்களா மேடம் என்று ரசிகர் ஒருவர் பதறிப் போய் கீர்த்தியிடம் கேட்டுள்ளார்.ஷூட்டிங்ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷ் சிரிச்சே செத்துட்டேன் என்றும் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.வீடியோவில் இருப்பது கீர்த்தி சுரேஷ் இல்லை என்றும், அவர் நலமாக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். ரசிகர்களே கவலைப்படாதீங்க தலைவி சேஃப்.

A video is doing rounds on social media saying that Keerthy Suresh got hurt in the shooting spot.

Videos similaires