மழையால் தடைபட்டாலும், திருவனந்தபுரத்தில் நடந்த மூன்றாவது டி-20 போட்டியை வென்று இந்தியா தொடரை வென்று, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சியை அளிதது போல், நியூசிலாந்து ஸ்பின்னர் இஷ் சோதியை, இந்திய ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அனாயசியமாக வென்று அசத்தினார்.
திருவனந்தபுரத்தில் நடந்த போட்டிக்காக விமானத்தில் பறந்தபோது, பொழுது போகாமல், செஸ் விளையாடலாமா என்று சாஹலிடம் சோதி கேட்டுள்ளார். இரண்டு ஆட்டங்கள் விளையாடியுள்ளனர். அந்த இரண்டிலுமே சாஹல் வென்றார்.
அதன்பிறகு தான், சாஹலின் மறுமுகத்தை சோதி தெரிந்து கொண்டார். சாஹல், 12 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை, 2002ல் வென்றவர். அதன்பிறகு, 16 வயதுக்குட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.
அதன்பிறகே, கிரிக்கெட் போட்டிகளில் சாஹல் களமிறங்கினார். நியூசிலாந்து தொடரில் 7 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Yuzvendra Chahal spins Ish Sodhi