வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்து வருகிறது.
வங்க கடலில் இலங்கைக்கு மேற்கே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் கடந்த 31ம் தேதி முதல் கன மழை பெய்தது. அவ்வப்போது விட்டும் மீண்டும் சூடுபிடித்தும் பெய்து வந்த மழையினால் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனிடையில் நேற்று வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஒருசில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை நின்று போச்சு என்று நிம்மதி பெருமூச்சு விட்ட சென்னை புறநகர் வாசிகள் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நாளை வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனிடையில் சென்னை நகரில் பெரும்பாலான பள்ளிகள் இன்று இயங்கிவருகிறது. மழையில் நனைந்தபடியே மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். கனமழையின் காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்க நினைத்தால் நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
Dis : The rains in Chennai and coastal districts have been rained due to low air pollution in the Bay of Bengal