முகம்மது சிராஜ் அடுத்த போட்டியில் சிறப்பாக பந்து வீசுவார்: பும்ரா நம்பிக்கை- வீடியோ

2017-11-07 138

இந்திய அணியின் அறிமுக வீரரான முகம்மது சிராஜ் தொடக்க போட்டியில் சிறிது தவறியிருந்தாலும் அதன் மூலம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் இருந்து சிறப்பாக பந்து வீசுவார் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கொலின் முன்ரோவின் சதத்தால் 196 ரன்கள் குவித்தது. பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியாவால் 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியின்போது இந்திய அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் அறிமுகமானார். இவர் நான்கு ஓவரில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆறுதலாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றினார்.

indian cricket bowler bumrah said Mohammed Siraj will be the best in the next match

Videos similaires