தமிழகம் முழுவதும் புதன் கிழமையில் இருந்து மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாய் கனமழை கொட்டி வருகிறது. இதேபோல் புதுச்சேரியிலும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது. தொடர் மழையால் ஒரு வாரமாக சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, இந்நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் புதன் கிழமையில் இருந்து மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இன்று முழுவதும் சென்னையில் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.காலையில் இருந்து பெய்துவரும் சாரல்மழை தீவிரமடையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
No major rains is seen with the long lasting low fading away very fast, rains will completely stop from 8th (Wednesday) in most places in Tamil Nadu said Tamilnadu weatherman.