தமிழக அமைச்சர்களுக்கு எதிராக ஓபிஎஸ் டீம்- வீடியோ

2017-11-06 7,900

தமிழக அமைச்சர்கள் தங்களை புறக்கணிப்பதாக அதிமுக ராஜ்யச்பா எம்.பி.யும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான மைத்ரேயன் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துவிட்டு வந்த பிறகும், அதிகாரத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகப் புலம்புகின்றனர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் சந்திக்க வருவது குறித்து எந்தத் தகவலும் சொல்வதில்லை என வேதனைப்பட்டிருக்கிறார் அ.தி.மு.க எம்.பி. மைத்ரேயன்.
ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்டு தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் கோரிக்கைகளை நிறைவேற்றும்விதமாக விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. துணை முதல்வர் பதவியோடு நிதித்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளையும் பெற்றுக் கொண்டார் பன்னீர்செல்வம்.

AIADMK Rajya Sabha MP Maitreyan Slammed that the TamilNadu Ministers in his facebook post.

Videos similaires