'அந்த சீன் படத்துல வராது..!' - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா- வீடியோ

2017-11-06 2

அதுல்யா, சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கும் 'ஏமாலி' திரைப்படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். 'லதா புரொடக்ஷன்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். வெளியான டீசரில் நடிகை அதுல்யா ரவி, ஆபாசமான காட்சிகளில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர். ஆடையைக் கழற்றுவது போலவும், படுத்திருக்கும் நிலையிலுமான காட்சிகளும் டீசரில் இடம்பெற்றிருந்தன. இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதுல்யா சிகரெட் பிடிக்கும் காட்சியும் படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்தது. முதல் படத்தில் ஹோம்லியாக நடித்துவிட்டு இப்போது இப்படியான நடிப்பில் இறங்குவது தவறு என்கிற ரீதியில் பலரும் தங்களது விமர்சனங்களை வைத்திருந்தனர். அதுல்யாவுக்கு ஆதரவாகவும் பலர் பேசி வந்தனர்.

The first teaser of the film 'Yemaali' was officially released by actor jayam ravi. Samuthirakani, Bala Saravanan, Sam Jones and Athulya are playing lead roles in this film. Many of her fans have criticized actress Athulya for appearing in obscene scenes in Teaser. 'I apologize for some of the scenes which the fans did not expect me to do,' Athulya said.

Videos similaires