மழை நீர் வெளியேற வழியில்லாமல் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாலையை அகற்றும் பணிகள் நடைபெறுவதாக ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார். வடசென்னையில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையம் தங்களது போக்குவரத்து வசதிக்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சாலை அமைத்துள்ளது. இதனால் மழையோ, பெருவெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால் அந்த நீர் கொசஸ்தலை ஆற்றில் செல்ல வழியில்லாமல் கழிமுகத் துவார பகுதிகளுக்கு அருகே தேங்கி நிற்கிறது
இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டுவதால் நீர் செல்ல வழியின்றி வடசென்னை மூழ்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.நடிகர் கமல்ஹாசனும் இதுகுறித்த எச்சரிக்கை விடுத்ததுடன் அந்த பகுதிகளை நேரில் சென்றும் பார்வையிட்டார்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகள் இருப்பது ஊர்ஜிதமானால் அவை அகற்றப்படும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி உறுதி அளித்திருந்தார்.
Tiruvallur Collector Sundaravalli orders to remove the road across Kosasthalai river.