இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் , இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வென்று 1-1 என தொடரில் சமநிலை வகிக்கிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் புதிதாக முகமது சிராஜ் என்ற வீரர் அறிமுகம் ஆனார். பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யக்கூடிய இவர் நெஹ்ராவின் இடத்தை நேற்று நிரம்பினார்.
இந்திய அணியில் நேற்று புதிதாக அறிமுகம் ஆன முகமது சிராஜ் களத்தில் இருக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார்.
தெலுங்கானாவை சேர்ந்த இவர் 2015 இறுதியில் ஹைதராபாத் ரஞ்சி அணிக்காக விளையாடினார். மிகவும் சிறப்பாக பந்து வீச கூடிய இவர் இந்த வருட ரஞ்சி போட்டியில் மிக அதிகமான விக்கெட்டுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹைதராபாத்தில், சன் ரைசர்ஸ் அணிக்காக 2.6 கோடியில் ஏலம் எடுக்கப்பட்டார்
Indian bowler Muhammed Siraj had made his debut in Rajkot T-20 match yesterday. He has cried in debut match while Indian national anthem playing.